1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்களே கவனம்.. கற்பூரம் ஏற்றாதீங்க.. மீறினால் 3 ஆண்டு சிறை..!

பக்தர்களே கவனம்.. கற்பூரம் ஏற்றாதீங்க.. மீறினால் 3 ஆண்டு சிறை..!

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நவம்பர் 17-ம் தேதி தொடங்கியது. கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நவம்பர் 16-ம் தேதி நடையை திறந்துவைத்து, கருவறையில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து, கோயில் முன்புள்ள ஆழி குண்டம் ஏற்றப்பட்டது. அன்று மாலை 6 மணியளவில் அபிஷேகம் நடத்தப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.


இதைத் தொடர்ந்து நவம்பர் 17-ம் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு ஐயப்பனை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். டிசம்பர் 27-ம் தேதியோடு மண்டல பூஜை முடிந்து சபரிமலை நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு ரயில்களில் செல்கின்றனர். அப்படி செல்லும் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து வழிபாடு நடத்துவதுடன், கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


இதனால், ரயிலில் தீ விபத்து ஏற்படும வாய்ப்புள்ளதால், ரயில்வே துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, சேலம் வழியாக கேரளாவிற்கு செல்லும் ரயில்களில், ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றினால் மூன்று ஆண்டுகள் வரை சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like