1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன்கார்டு தாரர்களுக்கு குட் நியூஸ்.. மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பு..!

ரேஷன்கார்டு தாரர்களுக்கு குட் நியூஸ்.. மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பு..!

ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்கவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்த (செப்டம்பர்) மாதத்துடன் இந்த திட்டம் முடிவடைவதாக தகவல்கள் வெளியானது.


இந்த நிலையில், "பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இறுதி வரை இலவச அரிசி திட்டம் தொடரும்.

அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய மூன்று முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது.


மேலும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது" என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like