வீடு காலி செய்தபோது சோகம்: மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு..!

வீடு காலி செய்தபோது சோகம்: மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு..!
X

தர்மபுரியில், வீடு காலி செய்யும் போது, எதிர்பாராத விதமாக பீரோ உரசி மின்சாரம் தாக்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு சொந்தமான வீட்டின் 2-வது மாடியில் இலீயாஸ், அவரது மனைவி சிராஜ் ஆகியோர் கடந்த 9 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.


இந்நிலையில், இன்று காலை, இலீயாஸ் குடியிருந்த பச்சையப்பன் வீட்டியிலிருந்து கோல்டன் தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடியேற, வீட்டில் இருந்த பொருட்களை மினி லாரி ஓட்டுநர் கோபி என்பவரை வரவழைத்து, 2-வது மாடியிலிருந்து கயிறு கட்டி வண்டியில் இறக்கி உள்ளனர்.

இலீயாசுக்கு உதவியாக ஓட்டுநர் கோபி, வீட்டு உரிமையாளர் பச்சையப்பன் மற்றும் குமார் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது பீரோவை கயிறுகட்டி இறக்கும் போது, வீட்டின் அருகே சென்ற மின் கம்பியில் பீரோ உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்லியே இலீயாஸ், ஓட்டுநர் கோபி ஆகியோர் உயிரிழந்தனர்.


மின்சாரம் பாய்ந்ததால் படுகாயமடைந்த பச்சையப்பன் மற்றும் குமார் ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, வீட்டு உரிமையாளர் பச்சையப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story
Share it