டிக்கெட் போட்டாச்சா..!! தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில்,இன்றுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.
தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் என கடந்த 2 வார இறுதியிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலித்தனர்.அரசு பஸ்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் அரசு பஸ்கள் பக்கம் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் மே தினம் 1-ந்தேதி (திங்கட் கிழமை) அரசு விடுமுறை.நாளை 29 (சனிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) 30-ந் தேதியை அடுத்து வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.
மேலும் மக்கள் வசதிக்காக தமிழக அரசு கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.