1. Home
  2. தமிழ்நாடு

மக்களே இது தெரியுமா ?3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

மக்களே இது தெரியுமா ?3 மாதங்களுக்கு ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அடையாள சான்று, முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும் என்பது ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறையாகும். அதன்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள்,மார்ச் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சேவையை ‘My Aadhaar' இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் அட்டை பெற்றவர்கள் உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் உள்ளிட்ட தகவல்களை புதுப்பிடித்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை மோசடிகளை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக UIDAI ஆதார் போர்ட்டலில் தனிநபர் ஆவண விவரங்களை புதுப்பிக்க ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like