1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியே வராத தாய், மகன்!!

கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியே வராத தாய், மகன்!!

கொரோனா பயம் காரணமாக தாயும், மகனும் வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளேயே 3 ஆண்டுகள் முடங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் வசித்து வரும் முன்முன் மாஜி (36) என்ற பெண், சக்கர்பூர் பகுதியில் 10 வயது மகன் மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆண்டு கொரோனா தாக்கம் அதிகரித்தவுடன் அவர் பயத்தில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. தனது 10 வயது மகனையும் வீட்டுக்கு வெளியே விடவில்லை.

கொரோனா பாதிப்பு சரியாகத் தொடங்கியதும் அவரின் கணவர் வேலைக்காக சென்றுள்ளார். பின்னர் அவரை வீட்டுக்குள் விடாமல் அருகில் தனி வீடு எடுத்துத் தங்கச் சொல்லியுள்ளார்.


கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியே வராத தாய், மகன்!!

இப்படி சுமார் 3 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறாமல் அவர் தனது மகனுடன் இருந்து வந்துள்ளார். கணவர் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வீட்டின் வாசலில் வைத்து விடுவார்.

கணவர் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மனநல நிபுணர்களுடன் பேசி அளித்த புகாரின் பெயரில் வீட்டை உடைந்து தாய் மற்றும் மகனை மீட்டுள்ளனர்.

10 வயது சிறுவன் 3 ஆண்டுகளாகச் சூரியன் ஒளியே படாமல் இருந்துள்ளான். தற்போது இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like