1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..!! விரைவில் 2,940 பேருந்துகளில் ‘ஜிபிஎஸ்‘ கருவி..!!

குட் நியூஸ்..!! விரைவில் 2,940 பேருந்துகளில் ‘ஜிபிஎஸ்‘ கருவி..!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் 2,940 பேருந்துகளில் ‘ஜிபிஎஸ்‘ கருவி பொறுத்தப்பட உள்ளது. 71 பேருந்து நிலையங்களிலும், 532 பேருந்து நிறுத்தத்திலும் பயணிகள் விவர பலகை டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட உள்ளது.

இதில், எந்தப் பேருந்து எந்த வழித்தடத்தில் எங்கு செல்கிறது என்பதனை பயணிகள் தெரிந்து கொள்ள முடியும். பேருந்து நிறுத்தங்களில் ரயில் நிலையங்களில் அறிவிக்கப்படுவது போல அடுத்து வரும் பேருந்தின் நேரம், தற்போதைய நேரத்தில் அந்த பேருந்து எங்கு இருக்கிறது, போன்ற விவரங்களையும் பயணிகள் அறிந்துகொண்டு பயணத்தை திட்டமிட முடியும். இதனை மொபைல் செயலி வாயிலாகவும் அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அத்துடன், பேருந்தில் பயணியப்பவர்கள் தங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில், மெட்ரோ ரயிலில் அறிவிக்கப்படுவதுபோல், இறங்கும் இடம் குறித்த அறிவிப்பு, பேருந்து நிறுத்தம் வாரியாக அறிவிக்கப்பட உள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், "இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. 31 மாதங்களில் முழு பணிகள் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதுபோன்ற திட்டம், இந்தியாவில் சில நகரங்களில் இருந்தாலும், பெரிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்" என்று அவர்கள் கூறினர்.

Trending News

Latest News

You May Like