1. Home
  2. தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல். சிறப்பு விற்பனை முகாம்: ரூ.269 மதிப்புள்ள 4ஜி சிம் இலவசம்..!

பி.எஸ்.என்.எல். சிறப்பு விற்பனை முகாம்: ரூ.269 மதிப்புள்ள 4ஜி சிம் இலவசம்..!

புதுச்சேரியில், நாளை (14-ம் தேதி) முதல் வரும் 16-ம் தேதி வரையிலான 3 நாட்கள் பி.எஸ்.என்.எல். சிறப்பு விற்பனை முகாம் நடக்கிறது. இதில், 269 ரூபாய் மதிப்புள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சிம் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, புதுச்சேரி பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேட்டுப்பாளையம், சுல்தான்பேட்டை, திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, எல்லைபிள்ளைசாவடி, கரிக்கலாம்பாக்கம், முதலியார்பேட்டை பஸ் நிறுத்தம், வில்லியனூர் பொது தொலைபேசி நிலையம், காமராஜர் நகர் பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றில் சிறப்பு விற்பனை முகாம் நடக்கிறது.

நாளை (14-ம் தேதி) முதல் வரும் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு விற்பனை முகாமில் 269 ரூபாய் மதிப்புள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சிம் இலவசமாக வழங்கப்படும். புதிய சிம்கார்டில் 45 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்கிலும் இலவசமாக பேசலாம். நாள்தோறும் 2ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ் இலவசம். பாரத் பைபர் நுழைவு பிளான் 329 ரூபாய் முதல் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like