1. Home
  2. தமிழ்நாடு

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்.. 25ம் தேதி வரை இலவசமாக பார்க்கலாம்..!

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்.. 25ம் தேதி வரை இலவசமாக பார்க்கலாம்..!

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒருவார காலம் கட்டணமில்லாமல் பொதுமக்கள் பார்வையிட தொல்லியல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) முதல் நவம்பர் 25-ம் தேதி வரை கட்டணமில்லாமல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கி தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.


உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தோ - சாரணிக் பாணியில் கட்டப்பட்ட அரண்மனையானது, பிரமாண்ட தூண்களுக்கு பெயர்பெற்றது. இந்த அரண்மனையில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. இந்த தூண்களின் உயரம் 82 அடி; அகலம் 19 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like