நிம்மதியை இழந்துவிட்டதாக லாட்டரியில் ரூ.25 கோடி வென்றவர் வேதனை!!

நிம்மதியை இழந்துவிட்டதாக லாட்டரியில் ரூ.25 கோடி வென்றவர் வேதனை!!
X

லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு விழுந்த பிறகு தனது ஒட்டுமொத்த நிம்மதியையும் இழந்துவிட்டதாக கேரளாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேதனை தெரிவித்துள்ளார்.

பணம் அதிகம் வந்தாலும் நிம்மதி இருக்காது என்பதற்கு இதுதான் உதாரணம். கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் வென்ற ஆட்டோ ஓட்டுநர் அனுப் ரூ.25 கோடி பரிசுத்தொகை வென்றார். இது கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் வைரலானது.

பரிசுத்தொகையால் ஆட்டோ ஓட்டுநர் அனுப் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் பரிசுத்தொகை அறிவிப்பு வந்த பிறகு தற்போது வருத்தத்தில் இருப்பதாக அவர் புலம்பியுள்ளார்.

25 கோடி ரூபாய் பரிசு விழுந்த பிறகு ஒட்டு மொத்த நிம்மதியையும் இழந்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.லாட்டரியில் கிடைத்த தொகையில் ஒரு சிறிய தொகையை கொடுத்து உதவுமாறு நாள்தோறும் பலர் வீட்டுக்கு வந்து நச்சரிப்பதாகவும், பரிசுத்தொகை வருவதற்கு முன்பு இருந்த மகிழ்ச்சி தற்போது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். பணம் இன்னும் வந்து சேரவில்லை என்று கூறியுள்ள அவர், தயவு செய்து உதவி கேட்டு வீட்டு கதவை தட்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை, எங்கு போனாலும் மக்கள் சூழ்ந்து, விடுகின்றனர். இதை விட சொற்ப பரிசுத்தொகையே கிடத்திருக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it