1. Home
  2. தமிழ்நாடு

உண்மையிலேயே இது அதிசயம் தான்..!! 248 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 17 வயது சிறுமி..!

உண்மையிலேயே இது அதிசயம் தான்..!! 248 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 17 வயது சிறுமி..!

கடந்த 6-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டது.நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 42 ஆயிரம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி துருக்கியில் 36,187 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள நபர்களை தேடும் பணி தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.


உண்மையிலேயே இது அதிசயம் தான்..!! 248 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 17 வயது சிறுமி..!

இதனிடையே 200 மணிநேரத்திற்கு பின்னர் இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கியின் கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் அலினா என்ற 17 வயது சிறுமியை மீட்புக் குழுவினர் 248 மணி நேரத்துக்குப் பிறகு இன்று உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி ஆரோக்கியத்துடன் இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளி அக்டோகன் தெரிவித்தார்.

மேலும், இந்த கட்டடத்தில் ஒரு வாரமாக வேலை செய்து வருகிறோம். இடிபாடுகளில் இருந்து மனிதர்களில் சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தோம். உயிருடன் ஒருவரை பார்க்கும் போது நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அக்டோகன் தெரிவித்தார்.




Trending News

Latest News

You May Like