1. Home
  2. தமிழ்நாடு

வரும் 23 முதல் 27 வரை பழனி மழை கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது..!!

வரும் 23 முதல் 27 வரை பழனி மழை கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது..!!

வருகிற 27-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களுக்கான அனுமதி, முன்னேற்பாடு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது எனவும், இதில் கோவில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர் என்றும் முடிவு செய்யப்பட்டது.கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 7.15 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியே அனுமதிக்கப்படுவர்.


வரும் 23 முதல் 27 வரை பழனி மழை கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது..!!

23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது. 28-ந்தேதிக்கு பிறகு வழக்கம்போல் நடைபெறும். அதேபோல் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான சேவை 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்குகளில் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு நடைபெறும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வின்போது சொர்ணபந்தனத்தில் அனைத்து பக்தர்கள் சார்பாக கோவில் நிர்வாகத்தில் விலை உயர்ந்த தங்கம், நவரத்தின கற்கள் வைக்கப்படும். இந்தவகைக்கு பக்தர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் கோவிலில் உரிய ரசீது பெற்று கொள்ளலாம்.

கும்பாபிஷேக நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் திருப்பணி வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திவிட்டு அதன் விவரம், ரசீது வழங்க வேண்டிய முகவரியை குறிப்பிட்டு கோவில் jceomdu 32203.hrce@tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்,


Trending News

Latest News

You May Like