1. Home
  2. விளையாட்டு

பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!!

பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!!

இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, டு பிளிஸ்சிஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் குவித்த நிலையில் டு பிளிஸ்சிஸ் 22 ரன்னில் அவுட் ஆனார்.அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி 50 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி இன்னும் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like