டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்பு..!!

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்பு..!!
X

நாடு முழுவதும் நாளை (26-ம்தேதி ) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் 17 ஊர்திகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகளும்அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.

தமிழ்நாடு, அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் - டையூ, குஜராத், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் 17 ஊர்திகள் அணிவகுப்பை அலங்கரிக்கும்.

மேலும் கலாச்சார துறை, உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள மத்திய பாதுகாப்புப் படைகள், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் மத்திய பொதுப்பணித் துறை, பழங்குடியினர் நலத்துறை, வேளாண் துறை உள்ளிட்டவை சார்பில் 6 ஊர்திகள் அணிவகுக் கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.Next Story
Share it