மடகாஸ்கர் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி..!!

மடகாஸ்கர் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி..!!
X

ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்படி சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர்.

அப்போது இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. ஆப்பிரிக்க நாட்டின் வடக்கே அங்கசொம்பொரோனா கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர காவல் படையினர் உடனடியாக கடலுக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


அவர்கள் அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 22 பேர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it