மருத்துவர்கள் அதிர்ச்சி..!! பிறந்து 21 நாட்களே ஆன ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் 8 கருக்கள்..!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 10-ம் தேதி பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டிபோல் இருப்பதை கவனித்த மருத்துவர்கள் அதனை அறுவைசிகிச்சை செய்து உடனடியாக அகற்றவேண்டும் என குழந்தையின் பெற்றோரிடம் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும் குழந்தை பிறந்து 21 நாட்கள் ஆன சமயத்தில், அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. குழந்தையின் வயற்றில் இருந்து கட்டியையும் மருத்துவர்கள் அகற்றிய நிலையில், அது பார்ப்பதற்கு நீர்க்கட்டி போல இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதனை பரிசோதித்தபோது அந்த நீர்க்கட்டியில் 8 கருக்கள் இருந்தது தெரியவந்தது. அவை ஒவ்வொன்றும் 3 முதல் 5 செ.மீ. வரை இருந்ததும் தெரியவந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமான நடந்து நீர்க்கட்டி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த வாரம் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாகவும், அதுவரை மருத்துவமனை கண்காணிப்பில் இருக்கவேண்டும் எனவும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
பிறந்த குழந்தையின் வயிற்றில் கரு உருவாகி இருப்பது என்பதே நம்பமுடியாத ஒன்று. ஆனால் 8 கருக்கள் ஒன்றாக இருந்தது என்பது மருத்துவ உலகில் நடக்கும் அரிதான நிகழ்வு என்கின்றனர் மருத்துவர்கள். இது மிகவும் அரிதான நடக்கக்கூடியது என்றும், பிறக்கும் 5 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத்தான் இதுபோன்று உருவாகும் என்றும் கூறுகின்றன ஆய்வு முடிவுகள்.
இந்த அரிய நிகழ்வை கருவுக்குள் கரு உருவாதல் என்கின்றனர். இதைத்தான் ஆங்கிலத்தில் fetus-in-fetu (FIF) என்கின்றனர். இருப்பினும் ஒரு குழந்தையின் உடலுக்குள் ஒரு கருதான் இதுவரை இருந்தது கண்டறியப்பட்டிருந்தாலும், 8 கருக்கள் ஒரே குழந்தையின் வயிற்றில் இருந்தது இதுதான் முதன்முறை என்று மருத்துவர் இம்ரான் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஞ்சி, ராணி மருத்துவமனையில் தலைவர் ராஜேஷ் சிங் கூறுகையில், "இது மிகமிக அரிதான நிகழ்வு என்பதால், இதனை சர்வதேச இதழ்களில் ஆய்வுக்கட்டுரையாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம்" என்று கூறியுள்ளார்.