விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!!

விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!!
X

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.வருமான வரித்துறையின் அறிக்கையைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த 2017ஆம் ஆண்டு சோதனையும் நடத்தியது. அதன்பின்னர், சென்னை சிபிஐ கூடுதல் நீதிமன்றத்தில், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த 2018இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிலும், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் காவல் அதிகாரிகள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் வணிக வரித்துறை, காவல்துறை மற்றும் கலால்துறை அதிகாரிகளான குறிஞ்சி செல்வன், கணேசன், லட்சுமி நாராயணன், மன்னர் மன்னன் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it