1. Home
  2. தமிழ்நாடு

வரும் 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு..!!

வரும் 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு..!!

ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று பகல் 12.30 மணிக்கு சுற்றி பார்க்கிறார். இதற்காக அவர் தனிப்படகில் அங்கு செல்கிறார். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிப்பார்க்கிறார். அதன்பின்பு அவர் கன்னியாகுமரி சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார்.

சுற்றுலா மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் அவர், மாலை 3 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்கு ராமாயண தரிசன சித்திரகூடத்தை பார்வையிடுகிறார். அதன்பின்பு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்த பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையிலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

Trending News

Latest News

You May Like