கோலிக்கு மிஸ் ஆன 200… ஆனாலும் அசத்தல் ஆட்டம்!!

கோலிக்கு மிஸ் ஆன 200… ஆனாலும் அசத்தல் ஆட்டம்!!
X

மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சீராக ரன்கள் குவித்தனர். தொடக்க வீரர் சுப்மன் கில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், நிதானமாக ஆடிய இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 240 பந்துகளில் சதம் விளாசினார்.




இதன் மூலம் 3.5 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்த விராட் கோலி தனது 28 டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார். பின்னர் கோலி, 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரது 200 ரன் மிஸ் ஆனது என்றாலும், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.




அக்ஸர் படேல், 79 ரன்கள் எடுத்து அசத்தினார். இதையடுத்து இந்திய அணி 571 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவை விட இந்தியா 88 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. நாளை 5ஆவது நாள் போட்டி நடைபெற உள்ளது. சதம் அடித்த விராட் கோலிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it