1. Home
  2. விளையாட்டு

பெண்கள் டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும் இந்திய வீராங்கனைகள் அறிவிப்பு..!

பெண்கள் டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும் இந்திய வீராங்கனைகள் அறிவிப்பு..!

மும்பையில், வரும் 9-ம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய பெண்கள் அணியுடன் மோதும் 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீராங்கனைகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மும்பை டி.ஒய் பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்தத் தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை வகிக்கிறார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக பூஜா வஸ்ட்ராக்கர் அணியில் இடம் பெறவில்லை.

இந்திய வீராங்கனைகள் விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேனுகா சிங் தாகூர், மேக்னா சிங், அஞ்சலி ஷர்வானி, தேவிகா வாய்ட்யா, எஸ்.மேக்னா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹார்லின் டியோல்.

நெட் பவுலர்கள்: மோனிகா பட்டேல், அருந்ததி ரெட்டி, எஸ்பி போகர்கர், சிம்ரன் பகதூர்.

Trending News

Latest News

You May Like