1. Home
  2. தமிழ்நாடு

இதை விட கொடுமை இருக்குமா..!! சாலையில் பெண்ணுக்கு பிரசவம்... 2 கி.மீ. பெற்ற குழந்தையை தூக்கி கொண்டு நடந்த தாய்!!

இதை விட கொடுமை இருக்குமா..!! சாலையில் பெண்ணுக்கு பிரசவம்... 2 கி.மீ. பெற்ற குழந்தையை தூக்கி கொண்டு நடந்த தாய்!!

ஒடிசா மாநிலம் தஸ்மந்திபூர் பகுதிக்கு உட்பட்ட துங்கால் கிராமத்தில் சாலை வசதி இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இந்த நிலையில், துங்கால் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் சாலையில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸில் ஏறுவதற்காக கர்ப்பிணியும் அவரது உறவினர்களும் நடந்து சென்றுள்ளனர். அப்போது கர்ப்பிணிக்கு பிரசவ வலி அதிகமாகி அங்கேயே அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் பிறந்த குழந்தையை அவர் கையில் தூக்கிக் கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு நடந்தே வந்துள்ளனர்.


இதை விட கொடுமை இருக்குமா..!! சாலையில் பெண்ணுக்கு பிரசவம்... 2 கி.மீ. பெற்ற குழந்தையை தூக்கி கொண்டு நடந்த தாய்!!

அதன் பிறகு அதில் ஏறி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். தற்போது மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமுடன் இருக்கின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒடிசாவின் மருத்துவ சேவை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை இச்சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



Trending News

Latest News

You May Like