1. Home
  2. தமிழ்நாடு

கண்ணீர் வரவைக்கும் செய்தி..!! உடல் உறுப்புகளை தானம் செய்து 2 உயிர்களை காப்பாற்றிய 18 மாத குழந்தை..!

கண்ணீர் வரவைக்கும் செய்தி..!! உடல் உறுப்புகளை தானம் செய்து 2 உயிர்களை காப்பாற்றிய 18 மாத குழந்தை..!

அரியானாவின் மேவத் பகுதியில் மஹிரா என்ற 18 மாத பெண் குழந்தை, வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதில், மஹிராவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அக்குழந்தைக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், கடந்த ௧௧ல் முற்றிலும் சுயநினைவு இழந்த இழந்த குழந்தை மூளைச் சாவு அடைந்தது....

இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தையின் உடலுறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி, தானமாக பெற்ற கல்லீரல் 6 வயது குழந்தைக்கும், இரு சிறுநீரகங்கள் 17 வயது நோயாளிக்கும் பொறுத்தப்பட்டன. மேலும் குழந்தையின் கண்களின் இருந்து எடுக்கப்பட்ட கார்னியா மற்றும் இதய வால்வுகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பாதுகாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டெல்லியில் உடலுறுப்பு தானம் செய்த இரண்டாவது மிகவும் சிறிய குழந்தை என்ற பெருமையை மஹிரா பெற்றுள்ளார்.

Trending News

Latest News

You May Like