1. Home
  2. தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு.. இந்த மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை..!

பிளஸ் 2 பொதுத்தேர்வு.. இந்த மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை..!

தமிழகத்தில், வரும் மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை 12-ம் வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும், செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. எனவே, அதற்கு ஏதுவாக ஹால் டிக்கெட் வழங்கக்கூடிய பணியை துரிதப்படுத்த தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவுசெய்து செய்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு பொதுத்தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து நாளை முதல் ஜனவரி 20-ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக அரசு தேர்வுத் துறைக்கு செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுக்கு 225 ரூபாய், மற்றவைகளுக்கு 175 ரூபாய் கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like