1. Home
  2. தமிழ்நாடு

‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீஸ் தேதி இதுதான்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..!

‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீஸ் தேதி இதுதான்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..!

‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் வரும் ஆண்டு (2023), ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதை, அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.


இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 அன்று வெளியானது. இந்தச் சூழலில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது.


முதல் பாகம் சுமார் 500 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தகவல். முதல் பாகத்தை காட்டிலும் கூடுதலாக இரண்டாம் பாகம் வசூலில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like