1. Home
  2. தமிழ்நாடு

படம் பார்த்த குற்றத்திற்காக 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை..!!

படம் பார்த்த குற்றத்திற்காக 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை..!!

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் வடகொரியா அச்சுறுத்தி வருகிறது. வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என பெரும் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது. விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். கடந்தாண்டு கிம் ஜான் உன்னின் தந்தை உயிரிழந்ததன் துக்கம் அனுசரிக்கப்பட்டது. துக்கம் அனுசரிக்கப்பட்ட 11 நாட்கள், பொதுமக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடைகளுக்கு செல்லக் கூடாது. குடிக்க கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது.

இணையதளங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதித்த இணையதளங்களை மட்டுமே பார்க்க முடியும். அரசு சொல்லும் செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகும். இதையும் மீறி வடகொரியாவின் அண்டை நாடும் பரம எதிரி நாடாகவும் உள்ள தென்கொரிய நாட்டு நாடகங்கள், சினிமாக்கள் வடகொரியாவில் பிரபலம் ஆகி வருகின்றன.


படம் பார்த்த குற்றத்திற்காக 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை..!!

இதனால், தென்கொரிய டிராமா ஷோக்கள் ப்ளாஷ் டிரைவ் போன்ற கருவிகள் மூலமாக கடத்தல் முறையில் வடகொரியாவிற்குள் கொண்டு வரப்படுகின்றன. தண்டனையில் இருந்து தப்புவதற்காக யாருக்கும் தெரியாமல் பூட்டிய வீட்டிற்குள் இருந்து கொண்டு இத்தகைய வீடியோக்களை வடகொரிய மக்கள் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தென்கொரிய, அமெரிக்கத் திரைப்படங்களைப் பார்த்ததற்காக இரண்டு சிறுவர்களுக்கு வடகொரிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஓர் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது. வடகொரியாவில், 'கே-நாடகங்கள்' என்று பிரபலமாக அறியப்படும் தென்கொரிய நாடகங்களைப் பார்ப்பது, விநியோகம் செய்வது தண்டிக்கத்தக்க குற்றமாகவும், அப்படி யாரேனும் செய்தால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை என்று சொல்லப்படுகிறது.


படம் பார்த்த குற்றத்திற்காக 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை..!!

இப்படியிருக்க தற்போது வெளியான தகவலின்படி, கடந்த அக்டோபர் மாதம் வடகொரியாவின் ரியாங்காங் மாகாணத்திலுள்ள ஒரு பள்ளியில் சந்தித்துக்கொண்ட 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், பல தென்கொரிய மற்றும் அமெரிக்க நாடக நிகழ்ச்சிகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அக்டோபர் மாதமே அந்தச் சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஹைசனில் உள்ள ஒரு விமான நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் நடந்து இத்தனை நாள்கள் ஆன பிறகும் இப்போதுதான் அது பற்றிய தகவல் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.


Trending News

Latest News

You May Like