மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!!
X

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் 'அவதார்-2 தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் 16-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது உலகின் அதிக வசூல் சாதனை படைத்த படம் என்ற சாதனையை படைத்தது.முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் அப்படம் உருவாகியிருந்தது. மோஷன் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் நாம் இதுவரை காணாத உலகத்தை கண் முன்னே காண்பித்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன்.
12 ஆண்டுகள் கழித்து தற்போது 'அவதார் 2' வரும் டிசம்பர் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ஒரு சில திரையங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட உள்ளன. இந்நிலையில் அவதார் 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இந்தியாவில் தற்போது தொடங்கியுள்ளது.Next Story
Share it