1. Home
  2. தமிழ்நாடு

லைட் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி ப்ளஸ்-2 மாணவன் பலி!!

லைட் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி ப்ளஸ்-2 மாணவன் பலி!!

கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (54). இவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இவரது மகன் கௌசிக் (17). இவர் கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் மின்விளக்கை ஆன் செய்வதற்காக கௌசிக் வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.


லைட் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி ப்ளஸ்-2 மாணவன் பலி!!

சத்தம் கேட்டு மேலே வந்து பார்த்த சுப்பிரமணியன் தனது மகன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததார். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Trending News

Latest News

You May Like