1. Home
  2. தமிழ்நாடு

பாஜக எம்எல்ஏவுக்கு 2 மாதம் சிறை: பெங்களூரு கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

பாஜக எம்எல்ஏவுக்கு 2 மாதம் சிறை: பெங்களூரு கோர்ட் அதிரடி தீர்ப்பு..!

தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி படிவத்தில் தவறான தகவல்களை அளித்ததாக, பெங்களூரு பாஜக எம்எல்ஏவுக்கு 2 மாதம் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு சிக்பேட் சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் உதய் கருடாச்சார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


அப்போது அவர், தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் தெரிவித்ததாகவும், தன் மீதான வழக்குகளை மூடி மறைத்ததாகவும் கூறி பெங்களூரு 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இதில், தகவல்களை மூடி மறைத்த வழக்கில் உதய் கருடாச்சாருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தவிட்டார். அத்துடன், கோர்ட் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

Trending News

Latest News

You May Like