1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! பள்ளி மாணவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை!!

அதிர்ச்சி! பள்ளி மாணவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியைச் சேர்ந்த ரம்யா (15) என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் வீட்டில் உள்ள செல்போனில் அவ்வப்போது விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. அப்படி விளையாடிக் கொண்டிருந்த போது தாயார் மகளை திட்டியதாக தெரிகிறது.

இதனால் கோபத்துடன் ரம்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரம்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அதிர்ச்சி! பள்ளி மாணவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை!!


இதேபோன்று நாகர்கோயில் அருகே கீழப் பெருவிளை பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவர் நடத்திவரும் பேட்டரி கடைக்கு சென்று பார்த்த போது கடையினுள் விஜயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இருவேறு தற்கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like