1. Home
  2. தமிழ்நாடு

பெண்களுக்கான வேலை வாய்ப்பு – 2 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்!!

பெண்களுக்கான வேலை வாய்ப்பு – 2 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்!!

சமூக நலத்துறையின் கீழ் "சகி”- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் இரண்டு தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் "சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது.

அதில் பணிபுரிய, பல்நோக்கு உதவியாளர் ( Multipurpose Helper), பாதுகாவலர் (Security Guard) நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆர்வமுள்ளவர்கள், வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


பெண்களுக்கான வேலை வாய்ப்பு – 2 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்!!


8-வது தேர்ச்சி (அ) 10-வது தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும். 21- 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணி புரிந்தவராகவும்/சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்.

24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளூரை சார்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 6400 வரை வழங்கப்படும், பாதுகாவலர் பதவிக்கு தொகுப்பூதியமாக ரூ. 10,000 வரை வழங்கப்படும்.


பெண்களுக்கான வேலை வாய்ப்பு – 2 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்!!

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் https://ariyalur.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

சகி ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவமனை எதிரில், அரியலூர் – 621704 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

newstm.in

Trending News

Latest News

You May Like