ஒரே நாளில் 2 மிகப்பெரிய படங்கள் ஒடிடியில் ரிலீஸ்..!!
முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்‘. துறைமுகம் பகுதியில் நடக்கம் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் மிரட்டலான கேங்ஸ்டராக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். இப்படத்திற்கு மறைந்த பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
அகிலன் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைத்திருக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இந்த படம் முதலில் வரவேற்பை பெற்ற நிலையில் அதன்பிறகு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதனால் வசூலிலும் பின்தங்கியுள்ளது. அதனால் இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த மார்ச் 10-ஆம் தேதி வெளியான இப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அயோத்தி. இந்த திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், அயோத்தி திரைப்படம் வரும் மார்ச் 31-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. திரைக்கு வந்து சில வாரங்களிலேயே இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.