1. Home
  2. விளையாட்டு

ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா.. ?- 2-வது போட்டியில் இன்று மோதல்

ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா.. ?- 2-வது போட்டியில் இன்று மோதல்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும்.


Trending News

Latest News

You May Like