1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் மருத்துவ மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பெண் ஐ.டி ஊழியர் உட்பட 2 பேர் கைது ..!!

கோவையில் மருத்துவ மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பெண் ஐ.டி ஊழியர் உட்பட 2 பேர் கைது ..!!

கோவை வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவுக்கார பெண் ஒருவர், எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில், கௌசல்யாவுக்கும், அந்த மாணவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் உறவுக்கார பெண்ணை பழிவாங்க வேண்டும் என , கௌசல்யா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர், மருத்துவ மாணவியின் நண்பரான தொண்டாமுத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் நடப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவர், மாணவியின் புகைப்படத்தை எடுத்து கௌசல்யாவுக்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி வைக்க. அந்த புகைப்படத்தை, கௌசல்யா ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவ மாணவி, இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ஐடி ஊழியர் கௌசல்யா, மாணவியை பழிவாங்கும் விதமாக இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, கௌசல்யா மற்றும் மாணவியின் நண்பர் பாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like