1. Home
  2. சினிமா

பிரபல காமெடி நடிகர் வீட்டில் வளர்த்து வந்த 2 கிளிகள் பறிமுதல்..!!

பிரபல காமெடி நடிகர் வீட்டில் வளர்த்து வந்த 2 கிளிகள் பறிமுதல்..!!

தனியார் தொலைக்காட்சியில் நடந்த காமெடி நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமான ரோபோ சங்கர், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் தனது வீட்டில் இரண்டு கிளிகள் வளர்ப்பது குறித்து வீடியோ பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் நேற்று வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டிற்கு வந்தனர். அங்கு விசாரித்த போது அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததன் பேரில் வீட்டில் அவர் சட்ட விரோதமாக வளர்த்து வந்த இரண்டு கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கிளிகள் கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காமெடி நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் இருந்து இரண்டு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரோபோ சங்கரின் மனைவி கூறுகையில், “கிளிகளை நாங்கள் இல்லாத நேரத்தில் வனத்துறையினர் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். கிளிகளுக்கு பிகில், ஏஞ்சல் என்று பெயரிட்டோம். என்னை அம்மா என்றும், கணவரை ரோபோ என்றும் அழைக்கும்” என்றார்.

Trending News

Latest News

You May Like