1. Home
  2. தமிழ்நாடு

பனிச்சரிவில் சிக்கி 2 வீரர்கள் உயிரிழப்பு!!

பனிச்சரிவில் சிக்கி 2 வீரர்கள் உயிரிழப்பு!!

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவுகிறது. காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளது.


பனிச்சரிவில் சிக்கி 2 வீரர்கள் உயிரிழப்பு!!

இந்நிலையில், பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் மலை அடிவாரத்தில் இருந்த 10 வீடுகள் பனியில் புதைந்தன.

இந்த சம்பவத்தின்போது பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த வீரர்கள் சிலர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து ராணுவத்துடன் சென்ற அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

அதில், இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், 45 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

newstm.in

Trending News

Latest News

You May Like