திடீரென விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட 2 பயணிகள்..! ஏன் தெரியுமா ?

திடீரென விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட 2 பயணிகள்..! ஏன் தெரியுமா ?
X

டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு நேற்று காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் இருந்த இரண்டு பயணிகள் முறையற்ற நடத்தை காரணமாக இறக்கி விடப்பட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


அந்த வீடியோவில் பயணி ஒருவர் விமானத்தின் பெண் ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறிய அந்த ஆண் பயணி, விமான பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பயணிக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் ஊழியர் உடனடியாக பாதுகாப்பு படை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து, பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்ட பயணி மற்றும் அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரையும் கீழே இறக்கி விசாரணை நடத்தினர். பின்னர் அவர், எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டார்.

இருப்பினும், மேலும் பிரச்சனை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அவர்கள் இருவரும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தனது விமானக்குழு ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், அவர் இறக்கிவிடப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Next Story
Share it