1. Home
  2. விளையாட்டு

சச்சின் டெண்டுல்கரின் 2 சாதனைகளை முறியடித்த கோலி!!


இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்தார். இன்று அடித்த சதத்தின் மூலம் சச்சினின் 2 சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களை அடித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி சமன் செய்திருந்தார்.


சச்சின் டெண்டுல்கரின் 2 சாதனைகளை முறியடித்த கோலி!!


இந்நிலையில் இன்று மீண்டும் சதம் விளாசி சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். அதற்கு சச்சின் 160 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்ட நிலையில், கோலி 101 ஆவது இன்னிங்ஸில் முறியடித்துள்ளார்.

ஒரே அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட , அதிகபட்ச சதம் என்ற அடிப்படையில், சச்சினின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 சதங்களே சாதனையாக இருந்தது. இதனை இன்று நடந்த இலங்கைக்கு எதிரான சதத்தின் மூலம் கோலி முறியடித்துள்ளார்.


சச்சின் டெண்டுல்கரின் 2 சாதனைகளை முறியடித்த கோலி!!


இலங்கை அணிக்கு எதிராக கோலி இதுவரை 10 சதங்களை விளாசியுள்ளார். இதேபோன்று இலங்கை அணிக்கு எதிராக சச்சினின் 8 சதங்களையும் கோலி கடந்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9 சதங்களை பதிவு செய்துள்ளார் விராட் கோலி.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் மகேலா ஜெயவர்த்தனே 12,650 ரன்கள் எடுத்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட 5ஆவது அதிகபட்ச ரன்னாகும். இதனையும் இன்று நடந்த போட்டியில் விராட் கோலி முறியடித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like