மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்றார்..!!
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், டி.ஆர்.பி.ராஜாவின் தந்தையுமான டி.ஆர்.பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
அமைச்சராக பதவியேற்றுள்ள மகன் டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக பணியாற்றி தமிழகத்தை முன்னேற்ற வேண்டும். சிறப்பாக பணியாற்றி முதல் அமைச்சரின் நன்மதிப்பை டி.ஆர்.பி.ராஜா பெறவேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
● தங்கம் தென்னரசு - நிதி, மனிதவள மேம்பாடு
● டி.ஆர்.பி.ராஜா - தொழில்துறை
● சாமிநாதன் - தமிழ் வளர்ச்சி
● பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம்
●மனோ தங்கராஜ் - பால்வளத்துறை
* நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. * அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.