இத்தனை வருஷம் ஆகியும் மருமகளுக்கு குழந்தை பிறக்கல... கொடூர முடிவை எடுத்த மாமியார்..!!
உ.பி-யை சேர்ந்தவர் சாலி பேகம். இவருக்கும் ஃபிரோஸ் அகமது என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவரது கணவர் குடும்பத்தினர் அவருடன் அவரை வசை பாடியுள்ளனர். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேகம் அவரது சகோதரர் கவுஸ் முகமதுவுக்கு போன் செய்து மாமியார் தனக்கு விஷம் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர்களது வீட்டிற்கு விரைந்து வந்த முகமது, உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பேகத்தை மீட்டு சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து முகமது அளித்த புகாரின் அடிப்படையில், பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மீது கட தாம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.