இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா..? வீட்டிற்கு செல்ல ஆட்டோ ஏறிய 18 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம்..!!
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் சின்ஹாட்டில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இது குறித்து போலீசார் அளித்த தகவலின் படி, ஹுசைங்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண், சின்ஹாட் பகுதியில் ஒரு மாணவருக்கு டியூஷன் எடுக்க சென்றுள்ளார். அவர் டியூஷனை முடித்து விட்டு சின்ஹாட் தீயணைப்பு நிலையத்திலிருந்து சார்பாக்கிற்கு ஆட்டோ பிடித்துள்ளார்.
ஆனால் ஆட்டோவில் ஓட்டுநருடன் உதவியாளர் ஒருவரும் இருந்துள்ளார். ஆனால் இளம்பெண் இது குறித்து சந்தேகம் கொள்ளவில்லை. இதனையடுத்து ஆட்டோ சில கிலோ மீட்டர் தொலைவில் வந்த பின்னர் தடம் மாறியுள்ளது. இதனை உணர்ந்துகொண்ட இளம்பெண் ஆட்டோவை ஏன் வேறுதிசையில் கொண்டு செல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஏதோ தவறாக நடக்கிறது என்பதை அறிந்த இளம்பெண் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இதற்கு சற்றும் சளைத்து கொடுக்காத ஓட்டுநர் மற்றும் உதவியாளர், ஒரு கட்டத்தில் ஆள் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ஆட்டோவிலிருந்து கீழே இறக்கி மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை எதிர்பாராத அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அவர்கள் அப்பெண்ணின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் சத்தம் எழுப்பினால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.