1. Home
  2. தமிழ்நாடு

உளவுத்துறையில் 1,675 பணியிடம்.. விண்ணப்பிக்க பிப். 10 கடைசி தேதி..!

உளவுத்துறையில் 1,675 பணியிடம்.. விண்ணப்பிக்க பிப். 10 கடைசி தேதி..!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை அமைப்பில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எக்ஸிகியூட்டிவ், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உட்பட பல்வேறு பணிப் பிரிவுகளில் நாடு முழுவதும் 1,675 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். உள்ளூர் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். புலனாய்வு பற்றிய கள அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உளவுத்துறையில் 1,675 பணியிடம்.. விண்ணப்பிக்க பிப். 10 கடைசி தேதி..!

செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வு உண்டு.

எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-2-2023. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www.mha.gov.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like