1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்: ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: 16 வீரர்கள் பலி..!

பெரும் சோகம்: ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: 16 வீரர்கள் பலி..!

சிக்கிம் மாநிலத்தில், ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்

சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா - சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில் இருந்து 3 வாகனங்களில் ராணுவ வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஒன்று ஒரு கூர்மையான திருப்பத்தை கடந்த போது சாலையை விட்டு விலகி செங்குத்தான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 16 வீரர்கள் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.


காயமடைந்தவர்கள் அனைவரும் வடக்கு வங்காளத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் உள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like