1. Home
  2. சினிமா

#BIG NEWS: பிரபல தயாரிப்பாளரும் அஜித்தின் நண்பருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்..!

#BIG NEWS: பிரபல தயாரிப்பாளரும் அஜித்தின் நண்பருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்..!

அஜித் நடித்த பல வெற்றிப்படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்.

அஜித்தின் நண்பராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி, ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு ஆகிய படங்களை தயாரித்தார்.

விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். எஸ்.எஸ் சக்கரவர்த்திக்கும், அஜித்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.




இந்த நிலையில் தன்னுடைய மகன் ஜான் நாயகனாக நடித்த ரேனிகுண்டா என்ற திரைப்படத்தை தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

மீண்டும் தன்னுடைய மகன் நடிப்பில் 18 வயசு படத்தை தயாரித்தார். ஆனால் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அதேபோல் சிம்பு நடிப்பில் தொடங்கிய வேட்டை மன்னன் திரைப்படமும் நிதி சிக்கல் காரணமாக பாதியிலேயே நின்றது.


#BIG NEWS: பிரபல தயாரிப்பாளரும் அஜித்தின் நண்பருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்..!


இதனால் சினிமா தயாரிப்பில் இருந்து விலகி இருந்தார். இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி கடந்த எட்டு மாதங்களாக புற்றுநோயால் அவதியுற்றார். இந்நிலையில் நள்ளிரவு அவர் உயிர் பிரிந்தது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like