1. Home
  2. தமிழ்நாடு

பாதிரியார் டூ பிளேபாய்..!! கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது!

பாதிரியார் டூ பிளேபாய்..!! கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் பெனெடிக் ஆண்டோ என்ற 27 வயதான பாதிரியார் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். முதலில் அன்பாக பேசிய அவர் நாட்கள் செல்ல செல்ல இரட்டை அர்த்தத்தில் பேசி பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார். தன்னிடம் விழுந்த பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்களின் ஆடைகளை கழற்றும்படி கூறி நிர்வாண நிலையில் வீடியோவும் பதிவு செய்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்த ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும், தனக்கு நடந்ததை வெளியே கூறினால் அவமானம் ஆகிவிடும் என்பதற்காக அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.


பாதிரியார் டூ பிளேபாய்..!! கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது!

இந்த நிலையில் பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அவர் இளம்பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் அவர் பேசிய காட்சிகள், உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் என கிளு, கிளுப்பூட்டும் பல காட்சிகள் வைரலாகி வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட புகைப்படம், அடுக்கடுக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் பாதிரியார் மீது புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும். உடலில் மோசமாக தொட்டதாகவும். பின்னர் வாட்ஸ்அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதாகவும். அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும், பேச்சிப்பாறையில் இருந்து பிலாங்காலை தேவாலயத்திற்கு மாற்றல் ஆகி சென்ற பிறகும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் அந்த பெண் புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரையடுத்து நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.தொடர்ந்து அவரை போலீசார் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்ள. காலை 8.30 மணி முதல் இரவு 7. 30 மணி வரையிலும் அவரிடம் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் ஆசாரிப்பள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை அழைத்துச் சென்று உடல் பரிசோதனை அறிக்கை பெற்றனர். அதன் பின்னர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் நாகர்கோவில் மாஜிஸ்திரேட் 2 வது எண் வீட்டில் நேற்று இரவு ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைப்பதற்கு மாஜிஸ்ட்ரேட் தாயுமானவன் உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சிறையில் அடைக்கப்பட்டார்.

Trending News

Latest News

You May Like