1. Home
  2. தமிழ்நாடு

ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது..!!

ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது..!!

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவங்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.


ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது..!!



அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. ஜனவரி மாதத்தில் சுமார் 15 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத வங்கி விடுமுறை பட்டியல்:

ஜனவரி 1, 2023 -ஞாயிற்றுக்கிழமை- புத்தாண்டு தினம் (அனைத்து மாநிலங்களிலும்)

ஜனவரி 2, 2023 - திங்கட்கிழமை - மிசோரம் மாநிலத்தில் விடுமுறை

ஜனவரி 3, 2023 - செவ்வாய்க்கிழமை - மணிப்பூர் மாநிலத்திற்கு விடுமுறை

ஜனவரி 5, 2023 - வியாழக்கிழமை - குரு கோவிந்த் சிங் ஜெயந்தி

ஜனவரி 11, 2023 - புதன் கிழமை - மிஷனரி தினம் (மிசோரம் மட்டும்)

ஜனவரி 12, 2023 - வியாழக்கிழமை - சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி

ஜனவரி 14, 2023 - சனிக்கிழமை - மகரச் சங்கராந்தி/இரண்டாம் சனிக்கிழமை

ஜனவரி 15, 2023 - ஞாயிற்றுக்கிழமை - பொங்கல்/மாக் பிஹு

ஜனவரி 16, 2023 - திங்கட்கிழமை - திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17, 2023 - செவ்வாய்க்கிழமை - உழவர் திருநாள்

ஜனவரி 22, 2023 - ஞாயிற்றுக்கிழமை - சோனம் லோசர் (சிக்கிம் மட்டும்)

ஜனவரி 23, 2023 - திங்கட்கிழமை - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி

ஜனவரி 25, 2023 - புதன் கிழமை -மாநில தினம் (ஹிமாச்சல பிரதேசம்)

ஜனவரி 26, 2023 - வியாழக்கிழமை - குடியரசு தினம் (அனைத்து மாநிலங்களிலும்)

ஜனவரி 31, 2023 - செவ்வாய்க்கிழமை - மீ-டேம்-மீ-ஃபை (அசாம் மட்டும்)



Trending News

Latest News

You May Like