1. Home
  2. விளையாட்டு

மோசமான தோல்வி..!! 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்த சிட்னி அணி..

மோசமான தோல்வி..!! 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்த சிட்னி அணி..

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடர் போல் ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற அடிலெய்டு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த்து. அதன்படி முதலில் களமிறங்கிய அடிலெய்டு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ரன்களும் , காலின் டி கிராண்ட்கோம் 33 ரன்களும் எடுத்தனர்.


மோசமான தோல்வி..!! 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்த சிட்னி அணி..



பின்னர் 140 ரன்களுடன் களமிறங்கியாய் சிட்னி அணி தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கிளக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அணைத்து வீரர்களும் அடிலெய்டு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 5.5 ஓவர்கள் முடிவில் வெறும் 15 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்து சிட்னி அணி மோசமான தோல்வியை கண்டது. இதனால் அடிலெய்டு அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டு அணியில் ஹென்றி தோர்ன்டன் 5 விக்கெட்டும், வெஸ் அகர் 4 விக்கெட்டும், மத்தேயு ஷார்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர். சிட்னி அணியில் 5 பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

Trending News

Latest News

You May Like