1. Home
  2. தமிழ்நாடு

பால் விலை உயர்வு எதிரொலி.. 15 ரூபாய் ஆகிறது டீ, காபி விலை..!

பால் விலை உயர்வு எதிரொலி.. 15 ரூபாய் ஆகிறது டீ, காபி விலை..!

ஆவின் பால் விலை எதிரொலியாக டீ கடைகளில் டீ, காபி 15 ரூபாயாக விலை உயர்வு செய்யப்படும் என்று மதுரை மாவட்ட காபி, டீ வர்த்தக சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள காரணத்தால், வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் ஆவின் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டின் விலை மட்டும் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது.


இந்நிலையில், மதுரை மாவட்ட டீ, காபி வர்த்தக சங்கத்தின் சார்பில் மதுரை வடக்கு மாசி வீதி பகுதியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சங்கத்தின் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரேஸ், "ஆவின் பால் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், ஏழை எளியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆவின் பால் நிறுவனம் அரசு சேவை நிறுவனம். இதனை தனியார் பால் நிறுவனங்களோடு ஒப்பீடு செய்து பால் விலையை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பால் விலை உயர்வு எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் காபி, டீ விலையை 3 ரூபாய் உயர்த்தி 15 ரூபாய்க்கு விற்பனை செய்வதென முடிவு செய்துள்ளோம்.

ஆவின் பால் விலையை குறைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டீக்கடைகளில் பேப்பர் கப்பில் டீ வழங்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்" என்று தெரிவித்தார். மதுரை மாவட்டத்தை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் டீ, காபி விலை விரைவில் உயரும் எனத் தெரிகிறது.

Trending News

Latest News

You May Like