படகு கவிழ்ந்து பயங்கர விபத்து... 145 பேர் பலி!!

படகு கவிழ்ந்து பயங்கர விபத்து... 145 பேர் பலி!!
X

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) பயங்கர விபத்து நடந்தது. 200 பயணிகளுடன் சென்ற மோட்டார் படகு லுலோங்கா ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்தில் 145 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 55 பேர் உயிர் தப்பினர். லுலோங்கா ஆற்றில் மோட்டார் படகு அதிக சுமையுடன் பயணித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பசன்குசு நகருக்கு அருகே பயணிகள் தங்கள் பொருட்கள் மற்றும் கால்நடைகளுடன் மோட்டார் படகில் காங்கோ குடியரசுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. படகில் பயணிகள், பொருட்கள் மற்றும் கால்நடைகள் அதிகளவில் ஏற்றப்பட்டதால், படகு அதிக எடை காரணமாக ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்தில் 145 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 55 பேர் உயிர் தப்பினர்.

டிஆர்சியில் அடிக்கடி படகு விபத்துகள் நடக்கின்றன. காங்கோவில் சாலைகள் இல்லாததால் மக்கள் படகுகளில் பயணம் செய்கின்றனர். அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம். நீச்சல் தெரியாவிட்டாலும் படகுகளில் பயணம் செய்யும் போது விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனர்.

ஆபத்து தெரிந்த பிறகு மீட்பு பணி தாமதமாகி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோன்ற சம்பவம் 2022 அக்டோபரில் காங்கோ ஆற்றில் நடந்தது. படகு மூழ்கியதில் 40 பேர் உயிரிழந்தனர்.


Next Story
Share it