1. Home
  2. விளையாட்டு

இங்கிலாந்து அணியில் 14 பேருக்கு வைரஸ் தாக்குதல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!


பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் வீரர்கள் 14 பேர் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி டிசம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 14 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்கள் தொண்டை வலி, வயிற்று பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள வீரர்கள் விரைவில் குணமடைந்து விடுவார்கள் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், முக்கிய வீரர்கள் சிலர் விளையாடவில்லை என்றால் ஆட்டம் பாதிக்கப்படும் எனத்தெரிகிறது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நாளைய தினம் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் வீரர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like