1. Home
  2. தமிழ்நாடு

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி : 134 வார்டுகளில் அமோக வெற்றி

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி : 134 வார்டுகளில் அமோக வெற்றி

250 வார்டு உறுப்பினர்கள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணி தொடங்கி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. 43 மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பம் முதல் பாஜக, ஆம் ஆத்மி இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. 126 வார்டுகளைக் கைப்பற்றும் கட்சி டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றும். இந்தச் சூழலில் ஆம் ஆத்மி 134 வார்டுகளிலும், பாஜக 104 வார்டுகளிலும் காங்கிரஸ் 9 வார்டுகளிலும், சுயேச்சை 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி : 134 வார்டுகளில் அமோக வெற்றி

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தன. இந்த மாநகராட்சித் தேர்தல், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இந்தத் தேரதல் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அரசியல் கட்சியாக உருவெடுத்து அண்மையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆம் ஆத்மிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது அவசியமானதாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறியிருந்தனர். அதேபோல், பாஜகவுக்கும் டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றுவது கவுரவ பிரச்சினையாக உள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

2007 முதல் 3 முறை வென்று டெல்லி மாநகராட்சியை பாஜக தக்க வைத்த நிலையில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆம் ஆத்மியிடம் டெல்லி மாநகராட்சியை பாஜக இழந்தது. இது பா.ஜ.க. தொண்டர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் இந்த வெற்றியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.கடந்த முறையை விட காங்கிரஸ் குறைந்த இடங்களே பெற்றதால், அக்கட்சி அலுவலகம் கொண்டாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கட்சிகள் - வெற்றி பெற்ற வார்டு

1) ஆம் ஆத்மி - 134.

2) பா.ஜ.க - 104.

3) காங்கிரஸ் - 9.

4) சுயேச்சை - 3.

Trending News

Latest News

You May Like